லால்குடி, ஆக. 29: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வெள்ளனூர் இடங்கிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் மனைவி நவமணி(60). சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 5 வருடங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அரளி விதையை, ஆடாதோடா இலை என்று நினைத்த நவமணி அதை பறித்து தின்றதாக கூறப்படுகிறது.
இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நவமணி சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் லால்குடி இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.