துவரங்குறிச்சி, ஆக. 29: துவரங்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பெண் மான்கள் உயிரிழப்பு. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை வளசப்பட்டி அருகே நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டரை வயது மதிக்கத்தக்க 2 புள்ளி பெண் மான்கள் காயமடைந்து பரிதாபமாக பலியானது.
உடனடியாக இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான இரண்டு மான்களையும் மீட்டு வனத்துறை அலுவலகத்தில் கால்நடை மருத்துவர் மூலம் 2 மான்களுக்கும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு வனத்துறை அலுவலகத்தின் அருகாமையிலேயே பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் பற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.