தொட்டியம், ஆக.27: திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சி பகுதியில், அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தொட்டியம் அரசு உதவி பெறும் புனித மரியன்னை துவக்கப்பள்ளி மற்றும் இளங்கோ மானிய துவக்க பள்ளிகளில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தினை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் குத்துவிளக்கு ஏற்றியும், சமையல் கூடங்களை திறந்து வைத்தும் பள்ளி மாணவர்களுக்கு உணவுகள் வழங்கியும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
தொட்டியம் பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு, பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கிருஷ்ணகுமார், செந்தில்குமார் வட்டார கல்வி அலுவலர்கள் கார்த்திக், ராஜலெட்சுமி உள்ளிட்ட பலர் முன்னிலையில் வைத்து திட்டத்தின் சிறப்பு குறித்து பேசினர். பேரூராட்சி கவுன்சிலர்கள் சம்பூர்ணம் ராமையா சாந்தி மோகன் மகாலட்சுமி நாராயணன் தொட்டியம் புனித மரியன்னை துவக்கப்பள்ளி அருட்பணி தந்தை தாளார் ஆரோக்கியசாமி, தலைமை ஆசிரியர் ராபர்ட் ஆகியோர் விழாவிற்கு வருகை தந்தவர்களை வரவேற்றனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.