Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்சியில் ஆக.31ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

திருச்சி, ஆக.27: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த 18 வயது பூர்த்தியடைந்த, குறைந்த பட்சம் 8வது, 10 வது, ஐடிஐ, டிப்ளமோ, 12 வது, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பெற்ற இளைஞா்களுக்கு (இருபாலரும்) அவரவா்களின் தகுதிக்கேற்ப, தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளித்திட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) மூலம் வேலை வாய்ப்பு முகாம் வரும் ஆக.31 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதால், திருச்சி மாவட்டம் மற்றும் இதரப் பகுதிகளைச் சார்ந்த இளைஞா்கள் மேற்படி வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் பங்கேற்க தன்விபரம் (பயோ- டேட்டா), கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, புகைப்படம் மற்றும் இதர சான்றிதழ்களின் நகலுடன் நோில் வருகை தர வேண்டும்.

மேலும், இணை இயக்குநா் திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியரகம், திருச்சி என்ற முகவாியில் நோிலோ அல்லது 0431-2412726 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களைப் பெறலாம். இத்தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் சரவணன் தொிவித்துள்ளார்.