துறையூர், செப்.25: துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துறையூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூர் நகராட்சி 17 மற்றும் 18வது ஆகிய வார்டுகளுக்கு தனியார் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமை துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறினார்.
முகாமில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் துறை, கால்நடை பராமரிப்பு, மின்சாரத்துறை, காவல்துறை, மாற்றுத் திறனாளி நலத்துறை என 15 துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
நிகழ்ச்சியில் துறையூர் நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், நகர்மன்ற துணை தலைவர் மெடிக்கல் முரளி, நகர்மன்ற உறுப்பினர்கள் சுமதி மதியழகன், இளையராஜா ஜானகிராமன், நகராட்சி ஆணையர் சசிகலா, தாசில்தார் சிவகுமார், துணை தாசில்தார் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.