திருச்சி, செப்.25: லால்குடி அருகே கூத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (33). இவர் உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயில் தெருவில் தள்ளு வண்டியில் பழவியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் செப். 23ம் தேதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பணம் கேட்டனர்.
இதுகுறித்து ரவிக்குமார் உறையூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து புத்தூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கார்த்திக் (35), புத்தூர் குளத்துமேடு பகுதியை சேர்ந்த சிவா ரத்தினவேல் (19), உறையூர் பாண்டமங்கலத்தைச் சேர்ந்த பிலால் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.