மணப்பாறை, நவ.22:மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் காவல் சரகத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் நேற்று போலீசார் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கண்ணூத்து கிராமம் கருப்பகோயில் மலைப்பகுதியில் லங்கர் கட்டை வைத்து சூதாட்டம் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், கண்ணூத்து கிராமத்தை சேர்ந்த புரவி மகன் சேகர்(32), தாதகவுண்டம்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி(55), நடுப்பட்டியை சேர்ந்த குப்பன் மகன் அரசுதன்(40) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த அஞ்சு குளிப்பட்டியை சேர்ந்த வீரன் அம்பலம் மகன் நாகராஜ்(40) என்பவது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 5 டூவீலர், 5 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.5,200 ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


