திருச்சி, நவ. 22: திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக நேற்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 32 நிறுவனங்கள் பங்கேற்றது. இதில் 150ம் மேற்பட்ட வேலை நாடுனர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு நிறுவனங்களில் நேர்காணல் நடைபெற்றதில் 50ம் மேற்பட்ட வேலை நாடுனர்கள் பணி நியமனம் பெற்றனர். இவ்வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய துணை இயக்குனர் பிரபாவதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சண்முகம், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


