முசிறி, ஆக. 22: முசிறி நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக், போதை பொருட்கள் குறித்த திடீர் ஆய்வு நடைபெற்றது முசிறி நகராட்சி பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், கடைகளில் போதை பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்தும் நகராட்சி ஆணையர் சண்முகம் உத்தரவின்படி, திருச்சி நாமக்கல் மெயின் ரோடு மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மளிகை கடை, அரிசி கடை, முட்டை கடை உள்ளிட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது, சுமார் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. மேற்படி ஆய்வில் சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சையது பீர், தனுஷ்கோடி மற்றும் களப்பணி உதவியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.