துறையூர், ஆக. 22: துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துறையூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் துறையூர் எம்எல்ஏ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி 14, 15வது வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம், செங்குந்தர் பள்ளியில் நடைபெற்றது.
இம் முகாமை துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறினார். இம்முகாமில் ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை மற்றும் பேரிடர் துறை, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவி தொகை, கால்நடை பராமரிப்பு துறை, மின்சார துறை, காவல்துறை, மாற்று திறனாளி நலத்துறை என 15 துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இம் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனு க்களை கொடுத்தனர். துறையூர் நகரச் செயலாளர், நகர மன்ற துணை தலைவர் மெடிக்கல் முரளி, நகராட்சி ஆணையர் வாசுதேவன், இளைஞரணி நகர துணை அமைப்பாளர் தமிழ், 15வது வார்டு உறுப்பினர் மணிகண்டன், அரசு மருத்துவர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.