லால்குடி, நவ. 21: லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 408 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் நேற்று வழங்கினார். திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர்(பொறுப்பு) பழனிவேல் முன்னிலையில் 408 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை சௌந்திரபாண்டியன் எம்எல்ஏ வழங்கினார். விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பகவான் கண்ணன், கிறிஸ்துராஜா, நகர் மன்ற உறுப்பினர் ராதிகா முருகன், நகர துணை செயலாளர் இளவரசன், பெரியசாமி, மாவட்ட பிரதிநிதி ஆனந்த், மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


