திருச்சி, ஆக.21: திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (41). இவர் கடந்த 17ம் தேதி தன் டூவீலரை கோணக்கரை டாஸ்மாக் அருகே நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது டூவீலர் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து தில்லைநகர் பகுதியை சேர்ந்த மணிஷ் (19) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவருடன் இருந்த 17 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் அடைத்து, பின்னர் பெயிலில் வெளியே விட்டனர்.
+
Advertisement