லால்குடி, நவ.19: லால்குடி அருகே சாலையை கடக்க முயன்றபோது மான் பாலத்திலிருந்து கீழே விழுந்து சாலையில் உயிரிழந்தது. திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கல்லகம் கிராமத்தில் ஆண் மான் ஒன்று திருச்சி-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது.
சாலையில் வந்த வாகனங்களின் சத்தத்தால் நிலைதடுமாறி பாலத்தின் கட்டைகளை தாண்டிபோது சாலையில் விழுந்துள்ளது. இதனால் மானுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அருகில் இருந்தவர்கள்கல்லகம் விஏஓ மோகன்ராஜ்க்கு தகவல் தெரிவித்தனர். விஏஓ உயிரிழந்த மானை மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.


