திருச்சி, நவ.19: திருச்சி பொன்மலை பகுதியில் நவ.17ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொன்மலைப்பட்டி சாய்பாபா கோவில் அருகே, வந்த வாலிபரின் டூவீலரை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது டூவீலர் டேங்க் கவரில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பொன்மலைப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் (23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 48 போதை மாத்திரை, ஊசிகளை பொன்மலை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


