திருச்சி, செப். 19: திருச்சி, வடக்கு தாராநல்லூர், பாரதி நகரை சேர்ந்தவர் பிரகாஷ்(39). இவர் கடந்த 17 ஆண்டுகளாக காந்தி மார்க்கெட் அருகே தள்ளுவண்டி கடையில் எலுமிச்சை விற்று வருகிறார். கடந்த 17ம் தேதி இவர் பெரிய கடை வீதி அருகே உள்ள டாஸ்மாக்கில் தன் நண்பனுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
அவர் தர மறுக்கவே, அந்த இரண்டு பெரும் பிரகாஷை மது பாட்டிலால் மண்டையில் தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த அவரின் நண்பன் செல்வத்தையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பிரகாஷ் மற்றும் செல்வம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து ராஜி மற்றும் சந்துரு ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.