திருச்சி, அக்.18: திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அக்.16ம் தேதி பாலக்கரை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாலக்கரை ஆலம்தெரு அருகே போதை மாத்திரை விற்றதாக குட்ஷெட் ரோடு ஆலம்தெருவைச் சேர்ந்த ஆரிப் (22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 57 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement

