Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து புது மாப்பிள்ளை பலி

துவரங்குறிச்சி, ஆக.18: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த T.இடையப்பட்டி மட்டக்குறிச்சியை சேர்ந்தவர் சின்னழகன் மகன் பாண்டித்துரை (25). இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை சொரியம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலையோரமாக இருந்த பத்தடி பள்ளத்தில் பாய்ந்தது.

இதில் பாண்டித்துரைக்கு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் பலியான பாண்டித்துரைக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆனது குறிப்பிடத்தக்கது. உடற்கூறு ஆய்வு முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.