திருச்சி,அக்.16: திருச்சி இபி ரோடு, அண்ணா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் விஷ்வா ஜனனி(44). இவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மாத பராமரிப்பு தொகை ரூ.1250 அனைத்து குடியிருப்பு வாசிகளிடமும் பெறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த குடியிருப்பைச் சேர்ந்த ஸ்ரீதேவி(42) என்ற பெண் பராமரிப்பு தொகை தராமல் வாட்ஸ்அப் செயலியில் தவறான பதிவுகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவதூறு தகவல்களை வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார். இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டை போலீசார் ஸ்ரீதேவி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.