திருச்சி,செப். 17: ஜீயபுரம் சின்னகருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (36). இவர் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஜீயபுரம் செல்லும் பேருந்தில் ஏறி அங்கும், இங்கும் சென்றதால் பஸ் டிரைவர் கணேசன் (42), சரஸ்வதியை ஓரிடத்தில் உட்காரும்படி கூறினார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சரஸ்வதி தனது உறவினர்களிடம் செல்போனில் தெரிவித்தார்.
இதனையடுத்து பஸ் ஜீயபுரம் சென்றபோது, சரஸ்வதி மற்றும் அங்கு வந்த அவரது உறவினர்கள் டிரைவரை தாக்கினர். இதில், காயமடைந்த டிரைவர் திருச்சி ஜிஹெச்சில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில் ஜீயபுரம் போலீசார் முத்துலிங்கம் (65), மணிகண்டன் (35), சக்திவேல் (40), ரோசய்யா (22), சரஸ்வதி ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் தப்பியோடிய தனுஷ் (19),பொன்னார் (19), செல்லப்பா (25) ஆகியோரை தேடுகின்றனர்.