திருச்சி, செப். 15: மத்திய அரசுப்பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுகள் திருச்சியில் இரண்டு மையங்களில் நேற்று நடந்தன.
திருச்சி வாசவி வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளி மற்றும் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
வாசவி வித்யாலயா பள்ளியில் நடந்த இந்த தேர்வு மூன்று அமர்வுகளாக நடந்தது. இதில் 724 பேருக்கு தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் 424 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 300 பேர் தேர்வு எழுத வரவில்லை.
ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மெட்ரிக் பள்ளியில் இரண்டு அமர்வுகளாக நடந்த தேர்வில், 550 பேருக்கு தேர்வு எழுத அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இதில் 339 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 211 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தத்தில் ஆயிரத்து 274 பேருக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 763 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 511 பேர் தேர்வு எழுதவரவில்லை.