திருச்சி, செப்.15: திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுகை, கரூர், ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக, கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் நீச்சல் போட்டி திருச்சியில் நடைபெற்றது. புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியால், அண்ணா விளையாட்டரங்கத்தில் நடத்தப்பட்ட இந்த நீச்சல் போட்டியில் 8 மாவட்டத்தில் இருந்து 6 கல்லூரிகளை சேர்ந்த 18 மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
12 பிரிவுகளில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் நாகை, ஏடிஎம் மகளிர் கல்லூரி 3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை பெற்று முதலிடம் பிடித்து பாரதிதாசன் பல்கலைக்கழக நீச்சல் போட்டி
யில் ஒட்டு மொத்த அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.