திருச்சி, அக்.13: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அக்.11ம் தேதி பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டதில், தஞ்சாவூர் சாலை தனியார் திருமண மண்டபம் அருகே புகையிலை பொருட்கள் விற்றதாக இ.பி ரோடு காந்தி தெருவைச் சேர்ந்த கோபி (21) என்பவரை கைது செய்தனர். இதே போன்று பாலக்கரை ஆலம்தெரு அருகே எடமலைப்பட்டி புதூர் தெற்கு தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (33) என்பவரை கைது செய்து அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் ஜாமினில் விடுவித்தனர்.
+
Advertisement