லால்குடி, செப்.13: மேலவாளாடியில் வந்தே பாரத் ரயில் மோதி பெண் மயில் உயிரிழந்தது. சென்னையிலிருந்து-திருச்சி நோக்கி நேற்று காலை வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தது. லால்குடி அடுத்த மேலவாளாடியை கடந்த சென்றபோது, திடீரென ஒரு பெண் மயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் மோதி பலியானது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மேலவாளாடி கிராம நிர்வாக அலுவலர் கஸ்பார் இறந்து கிடந்த பெண் மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
+
Advertisement