திருச்சி, செப். 13: திருச்சியில் அண்ணா கோளரங்கத்தில் இன்று வான் நோக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அண்ணா கோளரங்க நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பு, திருச்சி - புதுகை சாலையில் உள்ள அண்ணா கோளரங்கத்தில் இன்று மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை வான்நோக்கு நிகழ்ச்சி பொதுமக்கள் கண்டு மகிழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று வானம் தெழிவாக இருக்கும் பட்சத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். எனவே இந்த நிகழ்ச்சியை கண்டுகழிக்க மக்கள் அண்ணா கோளரங்கம் வருகை தருமாறு நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.