Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவெறும்பூரில் அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர், நவ.12: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் திருவெறும்பூர் வட்ட கிளை சார்பில் திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவெறும்பூர் வட்ட தலைவர் பழனியப்பன் தலைமை வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.

பணி ஓய்வுபெற்று 70 வயதை கடந்தவர்களுக்கு ஓய்வூதியத்தினை 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், வருவாய்த் துறை, மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,860 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி அனைத்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் முழுமையான மருத்துவ செலவை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.