திருச்சி, நவ.12: திருச்சியில் கஞ்சா வழக்கில் கைதான 2 பெண்கள் மீது குண்டர் தடு ப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹரிபாஸ்கர் காலனி அருகே கடந்த அக்.13ம் தேதி கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த ராம்ஜிநகர் ஹரிபாஸ்கர் காலனி செல்வி (58), ராம்ஜிநகர் மலைபட்டியைச் சேர்ந்தரேவதி (60) ஆகியோர் மீது திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து அவர்களிடமிருந்து 5 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில் அவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம், பரிந்துரையின் பேரில், திருச்சி மாவட்ட கலெக்டர் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு நேற்று சிறையில் சார்வு செய்யப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போது வரை மொத்தம் 100 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்களிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
