திருச்சி, அக்.12: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசிய ராகேஷ் கிஷோர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. உறையூர் குறத்தெருவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ் முத்துசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ், மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில தலைவர். இப்ராஹிம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் செல்வகுமார், வங்கி ஊழியர் சம்மேளன மாநில செயலாளர்களில் ஒருவரான ராமராஜ், ஏஐடியூசி திருச்சி மாவட்ட தலைவர் நடராஜா, மாதர் சங்கத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் அஞ்சுகம் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட குழு உறுப்பினர்கள் சண்முகம், சுமதி, மருதாம்பால், ரஷ்யா பேகம், நல்லுசாமி, கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement