திருச்சி, அக்.12: சென்னை, அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரியம் சார்பில் 2025-26ம் ஆண்டிற்கான 13வது மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவ, மாணவியர்களுக்கான செஸ் போட்டி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் நடந்தது. மாணவர்கள் பிரிவில் 9 கல்லூரிகளிலிருந்து 54 மாணவர்களும், மாணவியர்கள் பிரிவில் 7 கல்லூரிகளிலிருந்து 42 மாணவியர்களும் பங்கேற்ற செஸ் போட்டியில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரி-திருச்சி வளாக மாணவ, மாணவியர்கள் முதலிடம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து மண்டலங்களுக்கு இடையிலான செஸ் போட்டியில் விளையாட தகுதி பெற்றது. மாணவியர்கள் பிரிவில் சாரநாதன் பொறியியல் கல்லூரி, இரண்டாவது இடத்தையும் மூன்றாவது இடத்தை மாணவர்கள் பிரிவில் கேர் பொறியியல் கல்லூரியும், மாணவர்கள் பிரிவில் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி இரண்டாவது இடத்தையும், சாரநாதன் பொறியியல் கல்லூரி மூன்றாவது இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்று முதலிடம் பிடித்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரி-திருச்சி வளாக மாணவ, மாணவியர்களை முதல்வர் செந்தில்குமார், உதவி உடற்கல்வி இயக்குனர்கள் முருகன், சத்யநாராயணமூர்த்தி, ரமேஷ் ஆகியோர் பாராட்டினா்.
+
Advertisement