திருச்சி, செப். 12: திருச்சி புத்துார் பகுதியில் போதை மாத்திரை விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வண்ணாரப்பேட்டை அங்கன்வாடி பில்டிங் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த, 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அங்கு தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிந்து புத்தூர் நடுவண்ணாரப்பேட்டை திருவிக நகரை சேர்ந்த சரத்குமார்(24) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 47 போதை மாத்திரைகள், ஊசி மற்றும் ரூ.300 பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த ரிஷிகேஷ், சதாசிவம், லோகேஷ், செல்வா ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.