திருச்சி,செப்.10: திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் பிரான்சினா காலனி பகுதியில் செப்.8ம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை டூவீலரில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து எ.புதூர் போலீசார் வழக்கு பதிந்து, பிரான்சினா காலனியை சேர்ந்த கோபிநாத் (23) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 1 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் 1 டூவீலரை பறிமுதல் செய்தனர். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம்(25) தேடி வருகின்றனர்.