Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தங்கம் 133.1 கிராம் புத்தாநத்தம் அருகே வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தியவருக்கு 3½ ஆண்டு சிறை

மணப்பாறை, அக்.9: மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தியவருக்கு 3½ ஆண்டு சிறை தண்டனை வழங்கி மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் தேரடி மலம்பட்டியை சேர்ந்த ஆண்டியப்பன் (எ) ராஜா மனைவி சாந்தி, தனது கணவர் மற்றும் அவரது நான்கரை வயது பெண் குழந்தை ஹர்னிதாவுடன் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி துவரங்குறிச்சியிலிருந்து புத்தாநத்தம் வழியாக மணப்பாறை செல்லும் சாலையில் டூவீலரில் சென்றார். மன்சூர் தோட்டம் அருகே சென்றபோது, எதிரே தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பாபு (39) என்பவர் ஓட்டி வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்தில் ஹர்னிதா உயிரிழந்தார். ஆண்டியப்பன்(எ)ராஜா பலத்த காயம் அடைந்தார்.

இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் விஜயாமணி ஆஜரானார். வழக்கில் பாபுவிற்கு, 279 இபிகோ பிரிவில் 6 மாதம் மெய்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும், கட்ட தவறினால் ஒரு மாதம் மெய்க்காவலும், 338 இபிகோ பிரிவில் ஒரு வருட மெய்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் கட்ட தவறினால் ஒரு மாதம் மெய்காவல் தண்டனையும், 304(ஏ) இபிகோ பிரிவில் 2 வருட தண்டனையும், ரூ.1000 அபராதமும் கட்ட தவறினால் ஒரு மாத தண்டனையும் விதித்து மணப்பாறை குற்றவியல் நடுவர் ஆர்.அசோக்குமார் நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளார்.