திருச்சி,டிச.8: திருச்சி பொன்மலைபட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் பிராங்ளின் ஜோசப்ராஜ் (30), சதிஷ் மனோஜ்(33), சகோதரர்கள். கடந்த டிச.5ம் தேதி வீட்டின் அருகே பிராங்ளின் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதிஷ், பிராங்ளின் விரலை கடித்து, தலையில் தாக்கினார். இதில் காயம் ஏற்பட்ட அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து சதிஷ் மனோஜ்(33) கைது செய்தனர்.
+
Advertisement


