திருச்சி, அக்.8: திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்லதண்ணி கேணித் தெருவைச் சேர்ந்தவர் சர்வேஷ் (20). இவர் கடந்த 6ம் தேதி வெஸ்ட்ரி பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த மர்ம நபர் சர்வேஷிடம் ரூ.500 கேட்டார். அவர் தரமறுக்கவே கத்தியை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து கல்லுக்குழி பகுதியை சேர்ந்த பிரசன்னா(24) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement