திருச்சி, நவ.7: திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்கான கைபந்து போட்டி நடந்தது. சென்னை, அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரியம் சார்பில் 2025-26ம் ஆண்டிற்கான 13வது மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான கைபந்து போட்டி ஜெ.ஜெ. பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் நடந்தது. 7 கல்லூரி அணிகள் பங்கேற்ற கைப்பந்து போட்டியின் இறுதி போட்டியில் பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரி-திருச்சி வளாகம், இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியை 18-15 என்ற கோல் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து சென்னை,
அண்ணா பல்கலைக்கழக 13வது மண்டல கைப்பந்து போட்டியில் சாம்பியன் அணியாக திகழ்ந்து மண்டலங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்றது. 3வது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் ஜெ.ஜெ. பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் சாரநாதன் பொறியியல் கல்லூரியை 9-6 என்ற கோல் கணக்கில் வென்று 3வது இடம் பிடித்தது.
