திருச்சி, அக்.7: ஆர்.464 திருச்சி மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் 94ம் ஆண்டு பேரவை கூட்டம் கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் கண்காணிப்பாளர் (பொ.வி.தி) நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
இச்சங்கம் 2023-24ம் நிதி ஆண்டில் ரூ.252.35 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது. பொது பேரவையில் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் உதவியாளர் ப்ரீத்தி, அங்குராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.