துறையூர், அக்.7: துறையூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கோட்ட பொறியாளர் கண்ணன் தொடங்கி வைத்தார்.
திருச்சி நெடுஞ்சாலைத் துறை கோட்டம் துறையூர் உட்கோட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பிரிவுக்கு உட்பட்ட எரகுடி-ஆலத்துடையான் பட்டி-புளியஞ்சோலை சாலையில் இந்த ஆண்டு மழைக்காலத்தில் 2000 மரக்கன்றுகள் நடுவதற்கு திருச்சி வட்ட கண்காணிப்புப் பொறியாளர் இளம்வழுதி
உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில், திருச்சி கோட்டப் பொறியாளர் கண்ணன் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உதவிக் கோட்டப் பொறியாளர் நல்லதம்பி, உதவிப் பொறியாளர் சோலை முருகன், உதவிப் பொறியாளர் ஹரிஷ் கண்ணா, சாலை ஆய்வாளர் சுரேஷ் மற்றும் சாலை பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.