திருச்சி, நவ. 5: திருச்சி காந்தி மார்க்கெட் வளைவு அருகே போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனரத்தினம் நகர் 5வது தெருவை சேர்ந்த முகமது நிஜாமுதீன்(45) என்பவரன் 17 வயது மகன் டூவிலர் ஓட்டி வந்தார். இதனை கண்ட போலீசார் சிறுவன் ஓட்டி வந்த வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதனையடுத்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து டூவிலர் ஓட்டுவதற்கு அனுமதித்த தந்தை நிஜாமுதீனை கைது செய்தனர்.
+
Advertisement
