திருச்சி, ஆக.6: திருச்சியில் கோயிலில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ஏர்போர்ட் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ராமசாமி(66), அப்பகுதியில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் இணைச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி கோயிலை பூட்டி விட்ட சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது கோயிலினுள் சில மர்ம நபர்கள் கால் தடம் தெரிந்தது. இதையடுத்து கோயில் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் சோதனை செய்தபோது சில மர்ம நபர்கள் கோயிலுக்குள் புகுந்து உண்டியலில் சிறிய குச்சி மூலம் பசயை தடவி ரூ.300 பணத்தை திருடி கொண்டு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஏர்போர்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து ஏர்போர்ட் காமராஜர் நகரை சேர்ந்த கார்த்திக் குமார் (25) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுற்றுச்சூழல்களை மாசு படுத்தாமல் இயற்கை பிரபஞ்சத்திற்கு தனது கடமையை முறையாக சரிவர மாற்றி வந்தது. ஓசோன் படலம் வரை மனிதன் புவியிலிருந்து ஓட்டை போட துவங்கியதிலிருந்து இயற்கையும் மனிதனை விட்டு சற்று விலகி நிற்க தொடங்கியது என்றுதான் கூற வேண்டும்.