துறையூர், நவ. 5: துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள், டிஜிட்டல் பூத் ஏஜெண்டுகளுக்கான பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள், டிஜிட்டல் பூத் ஏஜெண்ட் பயிற்சி விளக்கம் கூட்டம் துறையூர் சிவாலயா திருமண மண்டபத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் எம்பி அருண்நேரு, துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கேசவன் பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகரசெயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, முத்துச்செல்வன் சரவணன் வீரபத்திரன், அசோகன், நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், ஊராட்சி குழு முன்னாள் தலைவர் சரண்யா மோகன் தாஸ், ஆதிதிராவிட நல குழு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், பேரூர் கழக செயலாளர் நடராஜன், வெள்ளையன், மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கண்ணனூர் குமார், செல்வகுமார், கார்த்திகேயன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
