Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்வதேச சிலம்பப் போட்டி திருச்சி மாணவி தங்கம் வென்று சாதனை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

திருச்சி, மே 28: மலேசியாவில் நடந்த சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் தனித்திறமை போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய திருச்சியை மாணவிக்கு விமான நிலையத்தில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மலேசியாவில் கடந்த மே 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் சர்வதே அவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் பலர் கலந்து கொண்ட இப்போட்டிகளில், திருச்சி மேலப்புதுார் தனியார் பள்ளியை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி கரோத்தே லிணா-வும் ஒருவர். இவர் சிறுவயது முதலே கராத்தே பயிற்சி பெற்று வந்தததால் இவரின் லீணா என்ற பெயருடன் ‘கராத்தே லீணா’ என்ற செல்லப்பெயரும் சேர்ந்து கொண்டது.

சிலம்பம் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் கராத்தே கலையுடன் கடந்த 4 ஆண்டுகளாக சிலம்பம் உலக சம்மேளனத்தில் சிலம்பம் பயிற்சியும் லீணா பெற்று வந்தார்.

இந்நிலையில் முதல் முறையாக மலேசியாவில் நடக்கும் சர்வதேச சிலம்பம் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு லீணாவுக்கு கிடைத்தது. இதையடுத்து மலேசியாவில் நடந்த போட்டியில் கலந்து கொண்ட கராத்தே லீணா பெண்களுக்கான சப்ஜுனியர் பிரிவில் கலந்து கொண்டார். அதில் தான் கலந்து கொண்ட தனித்திறமைப் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றிப்பதக்கத்துடன் நேற்று நாடு திரும்பிய கராத்தே லீணாவுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிலம்பம் உலக சம்மேளனத்தின் செயலாளர் கராத்தே சங்கர் அவருக்கு பாராட்டுதல்களுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.