சமயபுரம், செப்.30:சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையராக பணியாற்றி வந்த பிரகாஷ் திருவண்ணாமலை மண்டல இணை ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, திருப்பரங்குன்றம் துணை ஆணையராக இருந்த சூரியநாராயணன் சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்பதை யொட்டி கோயில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் மற்றும் உறுப்பினர்கள், பிச்சைமணி, சுகந்தி, லட்சுமணன், கோவில் குருக்கள் பணியாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பின்னர் இணை ஆணையர் சூரியநாராயணன் கோயிலில் உள் பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரங்களை சுற்றி ஆய்வு மேற்கொண்டு பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்க கோயில் பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
+
Advertisement