திருச்சி, நவ. 28: திருச்சி தலைமையிடத்து துணை மாநகர கமிஷனராக ஷியாமளா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவின் பேரில், திருச்சி மாவட்ட சிவில் சப்ளை உளவுத்துறை எஸ்பியாக இருந்த ஷியாமளா தேவி, திருச்சி மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே திருச்சி மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக இருந்த அரவிந்தன், தென்காசி மாவட்ட எஸ்பியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஷியாமளாதேவி இதற்கு முன்னர் பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாகவும், கரூரில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஐஜி அஷ்ரா கார்கே தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement

