திருச்சி, அக்.28: திருச்சி கே.கே.நகர் பிரேம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (66). இவர் திருச்சியிலுள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். அக்.25ம் தேதி இரவு தனது வீட்டில் மனைவி, மகள் மருமகன் ஆகியோருடன் தூங்கினார். அதிகாலை 2.15 மணியளவில், சத்தம் கேட்டு அவரது மனைவி எழுந்தார்.
அப்போது மர்மநபர் ஒருவர் முகமூடி அணிந்து வீட்டிற்குள் நுழைந்து, தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் பறிக்க முயன்றார். உடனே தடுக்க முயன்றபோது, மர்ம நபர்கள் மனோகரன் மற்றும் அவரது மருமகனை கல்லால் தாக்கி விட்டு தப்பி சென்றார். இதில் மனோகரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறி த்த புகாரின் பேரில் கேகே நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
