திருச்சி, அக்.25: திருச்சி இபி ரோடு கல்மந்தை காலனியை சோ்ந்தவர் மணிகண்டன்(27). இவர் கடந்த அக்.21ம் தேதி காலை தனது டூவீலரில் பால் வாங்கச் சென்றார். அப்போது காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி அருகே வந்தபோது மர்ம நபர்கள் வழிமறித்து, அவரது தாயாரைத் திட்டியதாக தெரிகிறது. அப்போது, இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், மணிகண்டனை மோசமான வார்த்தைகளால் திட்டி கல்லால் தாக்கினர். இதில் அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து காந்தி மார்க்கெட் கல்மந்தை காலனியை சேர்ந்த ஸ்டீபன்(26), இ.பி ரோடு உப்பிலிய தெருவை சேர்ந்த அரவிந்த்(26), அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (22) ஆகியோரை கைது செய்தனர்.
+
Advertisement
