Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பன்னாங்கொம்பு கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

மணப்பாறை, செப்.24: மக்களை நாடி அரசு சேவைகளை அளித்தும் வரும் முதலமைச்சரின் திட்டமான உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மணப்பாறை அடுத்த பண்ணப்பட்டி ஊராட்சிகளுக்கான முகாம் பன்னாங்கொம்பு மாரியம்மன் கோயில் அருகில் நேற்று நடைபெற்றது. வருவாய் வட்டாட்சியர் சுந்தரபாண்டியன், திமுக மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜன், ஒன்றியசெயலாளர் ராமசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமினை தொடங்கி வைத்தனர். 15 அரசு துறை சார்ந்த அலுவலர்கள் 46 சேவைக்களுக்கான மனுக்களையும் பதிவு செய்து உரிய தீர்வுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இதில் பெறப்பட்ட மொத்த 727 மனுக்களில் 233 மனுக்கள் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைக்கான மனுக்களாக பெறப்பட்டுள்ளன. நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, அண்ணாதுரை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் என பலர் பங்கேற்றனர்.