திருவெறும்பூர், அக்.23: திருவெறும்பூர் கிருஷ்ணசமுத்திரம் முதல் நிலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழகம் முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது.
மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் முதல் நிலை ஊராட்சியில் குமரேசபுரம் கிருஷ்ணசமுத்திரம் எழில் நகர் கணேசபுரம் திருவேங்கடநகர் தொண்டமான்பட்டி ஆகிய பகுதிகளை கொண்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் சுமார் 20,000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கிறிஸ்ணசமுத்திரம் ஊராட்சியில் நகர் பகுதியில் உள்ள பெல் ஓய்வு பெற்றோர் சங்க அலுவலகத்தில் உங்களுடன்ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு முகாமில் அனை த்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்துபெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்.மேலும் முகாமில் வருவாய்த்துறை சார்பில் நத்தம் பட்டா 6 பேருக்கும், வகுப்பு வாரிசான்றிதழ் மூன்று பேருக்கும், மருத்துவ காப்பீடு அட்டை இரண்டு பேருக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
முகாமில் டிஆர்ஓ ராஜலட்சுமி, திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த் மற்றும் அண்ணாதுரை ஊராட்சி செயலாளர் திவ்யசீலன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் கருணாநிதி, திருச்சி தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ் மற்றும் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.