திருச்சி, செப்.23: ஒன்றிய மோடி அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்காக கடந்த 2020ம் ஆண்டு செப்.20ம் தேதி நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமின்றி - தொழிலாளர் நல சட்டத்திருத்த தொகுப்பை நிறைவேற்றிய கருப்பு நாளை முன்னிட்டு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று தேசம் தழுவிய கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர் சட்டத்திருத்த தொகுப்பை திரும்பபெற வலியுறுத்தி கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தொ.மு.ச ஜோசப் நெல்சன், சிஐடியு ரெங்கராஜன், ஏ.ஐ.டியு.சி நடராஜா, ஐஎன்டியூசி வெங்கட் நாராயணன், எல்.எல்.எப் தெய்வீகன், யுடியுசி சிவசெல்வன் ஆகியோர் பேசினர்.