திருச்சி,செப்.23: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் செப்.26ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமா்த்தம் செய்யும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளனர். மேலும், இம்மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தோ்வு செய்யவுள்ளனர்