மணப்பாறை, செப்.22: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செவலூரில் அம்பேத்கர் கல்வி இயக்கம் சார்பில் நேற்று மாணவ, மாணவியர்களுக்கான இரவுநேர பாடசாலை தொடங்கப்பட்டது.
மணப்பாறை அடுத்த செவலூரில், பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அம்பேத்கர் கல்வி இயக்கம் சார்பில் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் டாக்டர் பீ.ஆர்.அம்பேத்கர் இரவுநேர பாடசாலை நேற்று மாலை தொடங்கப்பட்டது. ஓய்வுபெற்ற வங்கி அலுவலர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அம்பேத்கர் கல்வி இயக்க நிறுவனர் முனைவர் மாரியப்பன், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், ஆசிரியைகள் முத்துலெட்சுமி, ராஜேஸ்வரி மற்றும் செவலூர் அம்பேத்கர் நற்பணி மன்றத்தார் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக அம்பேத்கர் கல்வி இயக்கன் கெளர ஆலோசகர் பேராசிரியர் நல்லுச்சாமி, கீரிட் பவுண்டேஷன் அல்லிராணி, ஆதிதிராவிட நலப்பேரவை நிறுவனத் தலைவர் பழனியப்பன், மருத்துவர் மணிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக விசிக மாவட்ட பொருளாளர் மதனகோபால் வரவேற்றார். பழனி நன்றி கூறினர்.