முசிறி, செப்.22: முசிறி நகராட்சி சார்பில் நகராட்சி பகுதியில் நகர்ப்புறங்களை பசுமையாக்கள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவகுமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் சண்முகம், பொறியாளர் சம்பத் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை முன்னிட்டு நகராட்சி நடுநிலைப் பள்ளி எதிர்புறம் உள்ள நகராட்சி அறிவு சார்ந்த மையம் மற்றும் நீதிமன்ற வளாக வெளிப்புறம், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் பன்னீர்செல்வம் நகராட்சி மேற்பார்வையாளர் சையத், உதவியாளர் தனுஷ்கோடி, நகராட்சி தூய்மை இந்திய திட்ட பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நட்டனர்.
+
Advertisement